அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 25வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் அறிமுறைத்தேர்வானது நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் இன்று ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்றது.
10 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம், நட்டுவாங்கத் தேர்வு வரை நடாத்தப்பெற்ற இத்தேர்வில் நடனம் - பரதம், இசை (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, சுரத்தட்டு, புல்லாங்குழல்), மிருதங்கம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டு மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம், கலை பண்பாட்டுக்கழகம் ஜேர்மனி, இத்தாலி திலீபன் தமிழ்ச்சோலை ஆகிய கல்வி நிறுவனங்களின் முழுமையான ஆதரவுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நாடுகள் நிலையில் தேர்வுகளிற்கான ஒழுங்குகள் தேர்வு நடுவர்களாக ஆற்றுகைத் தரத்தினை நிறைவுசெய்த வளர்ந்துவரும் இளம் தமிழ்க்கலை ஆசிரியர்கள், முதுநிலை தமிழ்க்கலை ஆசிரியர்கள், நாடுகள் நிலை ஒருங்கிணைப்பாளர்கள், கல்விப்பணியக பொறுப்பாளர்கள், கடமையாற்றியிருந்தார்கள். தேசிய செயற்பாட்டாளர்கள் ஆகியோர் குறிப்பாக பிரதம, துணை மேற்பார்வையாளர்களாக அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வில் ஆற்றுகைத்தரத்தினை நிறைவு செய்த இளம் ஆசிரியர்கள் கடமையாற்றியதுடன் தங்கள் பணியினை மிகச்சிறந்த முறையிலும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
தேர்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
அறிமுறைத் தேர்விற்குத் தோற்றிய மாணவர்களிற்கான செய்முறைத்தேர்வுகள் இம்மாத இறுதிப்பகுதியில் இருந்து 2027 ஆம் ஆண்டு யூன் மாதம் வரை நாடுகள் நிலையில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்க்கலையினை ஆர்வத்துடன் கற்று அறிமுறைத் தேர்விற்கு தோற்றிய மாணவர்கள் அனைவரிற்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் மாணவர்களிற்கு பக்கபலமாக இருந்து ஊக்கமளித்து வழிநடத்துகின்ற பெற்றோர்களிற்கும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழத்; தேசியத்தின் பணிப்பில் தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் இத்தனைகால செயல்திட்டங்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற தேசப்பற்றுமிக்க அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
தமிழ்க் கலையினை புலம்பெயர் வாழ் தமிழ் பிள்ளைகளிற்கு பக்குவமாக எடுத்துச்செல்கின்ற தமிழ்க்கலை ஆசிரியர்கள் அனைவரிற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் இவர்கள் அனைவரினதும் கல்விப்பணி தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி.
நாகராஜா விஐயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்
மேன்மையடைய அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்.
11.10.2026