பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2022-23-ம் ஆண்டில் மாவட்டங்கள் ஏ, பி, சி என 3 வகையாகப் பிரிக்கப்பட்டன.
ஏ பிரிவுக்கு ரூ.17.50 லட்சம், பி பிரிவுக்கு ரூ.14 லட்சம், சி பிரிவுக்கு ரூ.12 லட்சம் வீதம் வீதம் மொத்தம் ரூ.4.96 கோடியில் புத்தகக் கண் காட்சிகள் நடத்தப்பட்டன.
2023-24 மற்றும் 2024-25 ஆகிய ஆண்டுகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் (2026-27) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்காக, மொத்தம் ரூ.8.45 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
பொது நூலக இயக்குநர் இந்த நிதியை மாவட்டக் கருவூலங்கள் மூலம் முன்பணமாகப் பெற்று, புத்தகக் கண்காட்சிகளை நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.