பழநியில் ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் அமைச்சர் ரமேஷுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த அறக் கட்டளை நிர்வாகி முருகதாஸின் மனைவி தெரிவித்தார்.
பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, முறைகேடாக தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் கவுமார மடாலய தலைவரும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவருமான முருகதாஸுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
“அமைச்சருடன் எங்களுக்கு தொடர்பு இல்லை” - பழநியில் நிலம் விற்ற அறக்கட்டளை நிர்வாகி மனைவி தகவல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space