அரசியலமைப்புக்கு அமைவாக செயற்படுவதற்கு ஜனாதிபதியும், அரசியலமைப்பு பேரவையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். தகுதியான ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதியளிக்க வேண்டும் என அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற அமர்வின் போது கணக்காய்வாளர் நாயகம் நியமனம் பற்றி உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு 4 பேரின் பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்ததாக ஆளும் தரப்பின் பிரதம கொறடா குறிப்பிட்டார்.
கணக்காய்வாளர் நாயகம் வறிதானவுடன் பதில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டது. அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியது. அதன் பின்னர் தற்காலிக பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு அரசியலமைப் பேரவை அனுமதி வழங்கவில்லை.
ஜனாதிபதி கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது பல்கலைக்கழக நண்பரின் பெயரையும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் பெயரையும், 11 ஆண்டுகாலமாக உள்ளக கணக்காய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரியின் பெயரையும் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்தார். ஜனாதிபதியின் முன்மொழிவுகள் மூன்றும் தகுதியற்றவை என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கணக்காய்வாளர் நாயகம் அரச நிதி பற்றிய குழுவுடன் நேரடியாக தொடர்புப்பட்டவர்.
கணக்காய்வாளர் நாயகம் பதவி நியமனம் இழுபறி நிலையில் உள்ளதாலல் குழுவின் செயற்பாடுகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இந்த சிக்கல் குறித்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவுறுத்தியிருந்தேன்.
ஜனாதிபதி எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ' கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நால்வரின் பெயரை பரிந்துரைத்தேன். இவ்விடயம் தொடர்பில் அரசியலமைப்பு பேரவைக்கு அறிவுறுத்துமாறு' குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு பேரவைக்கு எம்மால் அறிவுறுத்த முடியாது. ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து அரசியலமைப்பு பேரவை செயற்பட வேண்டும். அதேபோல் அரசியலமைப்பு பேரவையும், ஜனாதிபதியும் அரசியலமைப்புக்கு அமைய செயற்பட தெரிந்துக் கொள்ள வேண்டும். தகுதியானவரை கணக்காய்வாளராக நியமிக்குமாறு அரசியலமைப்பு பேரவையிடம் வலியுறுத்துகிறோம் என்றார்.
அரசியலமைப்புக்கு அமைவாக செயற்படுவதற்கு ஜனாதிபதியும், அரசியலமைப்பு பேரவையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space