அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்!
Ad Space
Ad Space
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால், அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் உதவி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்து உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச புகார்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம்இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழகத்தில் லஞ்சம் வாங்கப்பட்டால் அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க 9498180936 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு துறைகளின் இணையதளத்திலும் இந்த வாட்ஸ்அப் எண் இடம்பெற வேண்டும் என்றும், அதனுடன் லஞ்ச ஒழிப்பு துறையின் இணையதளத்தின் இணைப்பும் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space