இத்​தாலி​யின் விசென்சா மாகாணம் லூசி​யானாவில் 1946 டிசம்​பர் 9-ம் தேதி சோனியா பிறந்​தார். சிறு​வயதில் அங்​குள்ள வீட்​டில்​தான் அவர் வசித்து வந்​தார். இத்த வீட்டை இத்​தாலி​யில் வசிக்​கும் சீக்​கிய தொழிலதிபர் சுக்​தேவ் சிங் காங் (52) 6 ஆண்​டுகளுக்கு முன்பு வாங்​கினார்.

இது​குறித்து பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு தொலைபேசி மூலம் சுக்​தேவ் சிங் கூறும்​போது, “சோனியா வசித்த வீட்டை 2020-ல் என் மனைவி மற்​றும் மகளின் பெயரில் வாங்​கினேன். அங்கு ஒரு பராமரிப்​பாளர் உள்​ளார். சுற்​றுலாப் பயணிகள் அந்த வீட்​டைப் பார்க்க விரும்​பினால், அவர் அதற்கு ஏற்​பாடு செய்​கிறார்.

‘இந்​தி​யன் ஹவுஸ்’ என்று அழைக்​கப்​படும் அந்த வீட்​டில் இந்​திய தேசிய மூவர்​ணக் கொடி பறக்​க​விடப்​பட்​டுள்​ளது. அதன் வெளியே உள்ள பெயர் பல​கை​யில் ‘சோனியா காந்தி பிறந்த இடம்’ என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த வீட்டை சோனியாவின் அருங்​காட்​சி​யக​மாக மாற்ற திட்​ட​மிட்​டுள்​ளேன். இதில் காட்​சிப்​படுத்​து​வதற்​கான நினைவுப் பொருட்​களைப் பெறு​வதற்​காக சோனியா காந்தி குடும்​பத்​தைச் சந்​திக்க ஆவலாக உள்​ளேன்” என்​றார்.

பஞ்​சாப் மாநில் ஹோஷியார்​பூர் அருகே உள்ள கிராமத்​தில் பிறந்​தவர்​தான் சுக்​தேவ் சிங். 1992-ல் வேலை நிமித்​த​மாக இத்​தாலிக்​குச் சென்ற அவர், இப்​போது அங்கு பல்​வேறு தொழில்​களை நடத்தி வரு​கிறார். நிரந்​தர குடியுரிமையும் பெற்​றுள்​ளார்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி தனது எக்ஸ் பக்​கத்​தில் நன்றி தெரிவிக்கும் எமோஜியுடன், “சிங் சாப் அவர்​களின் இந்த அன்​பான செயலுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.