அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்துவ பகுதியில் 58 வயதுடைய நபர் ஒருவரை கொலை செய்ததாகக் கூறப்படும் 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் நேற்று (06) செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் அவரைத் தாக்கி உதைத்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தல்துவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.