அவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் மற்றும் விக்டோரியா மாநிலத்தின் புறநகர்ப் பகுதிகளில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி இன்று சனிக்கிழமை (03) அதிகாலை 2:01 மணிக்கு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மெல்போர்ணின் கிழக்குப் பகுதியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையங்கொண்ட இந்த பூமியதிர்ச்சி 4.8 ரிக்டர் அளவில்  பதிவாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

'ஷேக் மேப்' (Shake map) தரவுகளின்படி, மெல்போர்ண் நகரத்தின் சில பகுதிகளில்  இந்த பூமியதிர்ச்சி பரவலாக உணரப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.