அவுஸ்திரேலிய அரசின் சுகாதார தரவு இணையதளத்தில் கடந்த ஜூன் மாதம் 'OpenAI' நிறுவனத்தின் ஏஐ ஏஜென்ட் ஒன்று அனுமதியின்றி ஊடுருவி கோப்புகளை அணுகியதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அரச இணையதளம் ஒன்றில் ஏஐ ஏஜென்ட் ஊடுருவியதாக அறியப்படும் முதல் சம்பவம் இதுவாகும்.

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,  "அரசு செலவினங்கள் மற்றும் மருத்துவப் புள்ளிவிவரங்களைக் கையாளும் ஏஜென்சியின் தரவுத் தளத்திற்குள் OpenAI ஏஜென்ட்  நுழைந்துள்ளது.எனினும் குறித்த  வலையமைப்பில் பிற பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.