பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை சனிக்கிழமை (24) காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெறவுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.