இந்தியாவில் ஓடும் மோட்டார் சைக்கிளில் பெண்ணை வீதியில் இழுத்துச் சென்ற நபர்!
Ad Space
Ad Space
இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் பதிவு செய்து எக்ஸ் சமூக ஊடகங்கத்தில் பகிர்ந்த காணொளி தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ராஜ்கிரில் உள்ள கிலா மைதானம் மற்றும் வேணுவன் பகுதிக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காணொளியில், மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பெண் ஒருவர் வாகனத்தின் கைப்பிடி அல்லது அதன் பின்பகுதியைப் பற்றிக்கொண்டு வீதியில் இழுத்துச் செல்லப்படுவது பதிவாகியுள்ளது.
ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, பெண்ணுடன் சேர்ந்து வீதியில் கீழே விழுந்துள்ளார்.
இதனை அடுத்து, அங்கு திரண்ட பொதுமக்களில் ஒருவர் ஆத்திரமடைந்து மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை தாக்க முயன்றுள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும், பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Ad Space
Ad Space