இந்து வாக்காளர்களை மட்டுமே குறிவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையை தமிழக மக்கள் புறக்காணிப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஏற்கெனவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வெளியிட்ட வாக்குறுதிகளின் நகலாகவே உள்ளது. இதில் எந்தப் புதுமையும் இல்லை. மாறாக, இந்து வாக்காளர்களை குறிவைத்து அவர்களை கவரும் நோக்கில், வகுப்புவாத மற்றும் இந்துத்துவ கருத்துகளை பாஜக முன்னிறுத்தியுள்ளது. உதாரணமாக, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வோம் என பாஜக கூறுகிறது. திருப்பரங்குன்றத்தில் புதிதாக இவர்கள் தான் தீபம் ஏற்றப் போவதாகவும், இதுவரை தீபமே ஏற்றப்படாதது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
இந்துக்களை மட்டுமே குறிவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கை: மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விமர்சனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space