நாட்டை 4 வலயங்களாகப் பிரித்து இன்று திங்கட்கிழமை ( 19.10.2026) முதல் எதிர்வரும்- 21 ஆம் திகதி புதன்கிழமை வரையான மூன்று தினங்களுக்குத்   தினமும் மாலை-04.30 மணி முதல் இரவு-08.30 மணி வரையான காலப் பகுதியில் மின்வெட்டைச்  சுழற்சி முறையில் அமுல்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒவ்வொரு வலயத்திலும் தலா ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மின்வெட்டு நடைமுறை நாடளாவிய ரீதியில் இன்று அமுலுக்கு வந்துள்ளது. எனினும், மின்வெட்டுத் தொடர்பாக உரிய முன்னறிவிப்பு வழங்கப்படாதது தொடர்பில் மக்கள் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.