“சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி சிறு பிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வைத்து, அவர்களின் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்யவைத்து திட்டமிட்டு வாக்களிக்கச் செய்து ஆட்சிக்கு வந்துள்ளனர். அது நம் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சையில் பூண்டி கலைவாணன் இல்ல திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாக கருதி பாடுபடும் இயக்கம் திமுக. நடந்து முடிந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்துவிட்டதை போல, இத்துடன் திமுக முடிந்துவிட்டது என இரங்கற்பா பாடுவதற்கு சிலர் முன்வந்துள்ளனர். நம்முடைய இன எதிரிகள் அந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திமுக இதுவரை எத்தனையோ தேர்தல்களை பார்த்துள்ளது. 1949ல் தொடங்கிய திமுக, பல தேர்தல்களை சந்தித்து வெற்றியையும், தோல்வியையும் பெற்றுள்ளது.
“இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்துள்ளனர்” - தவெகவை சாடிய ஸ்டாலின்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space