தமிழகம் மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்கு புதி​தாகத் தேர்வான நிர்வாகிகள், அதன் தலை​வர் கே.க​திர​வன் தலை​மை​யில் நேற்று முதல்​வர் விஜய், அமைச்​சர் சிடிஆர்​நிர்​மல்​கு​மார் ஆகியோரை சந்​தித்​தனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கே.க​திர​வன் கூறிய​தாவது: வழக்​கறிஞர்​களின் நலன் மற்​றும் பாது​காப்பை உறு​தி​செய்​யும் வகை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை அரசிடம் முன் வைத்​துள்​ளோம்.

அதன்​படி, தமிழக வழக்​கறிஞர்​கள் நல நிதித் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும் இறப்பு நிவாரணத் தொகையை ரூ.10 லட்​சத்​தில் இருந்து ரூ.25 லட்​ச​மாக உயர்த்த வேண்​டும், விரி​வான வழக்​கறிஞர்​கள் பாது​காப்​புச் சட்​டத்தை இயற்ற வேண்​டும், புதி​தாகப் பதிவு செய்​யப்​படும் இளம் வழக்​கறிஞர்​களுக்​கான மாதாந்​திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரத்​தில் இருந்து ரூ.10 ஆயிர​மாக உயர்த்த வேண்​டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்.பொருளா​தா​ரரீ​தி​யாகப் பின்​தங்​கி​யுள்ள வழக்​கறிஞர்​களுக்கு வீட்டு வசதித் திட்​டம், மாநில சட்​டக்​கல்வி அகாட​மியை நிறுவ வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தி​யுள்​ளோம். ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகங்​களில் வழக்​கறிஞர்​களுக்​கான அறைகளைக் கட்​டித் தர வேண்​டும்.

தமிழ்​நாடு முழு​வதும் உள்ள ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகங்​களில் வழக்​கறிஞர்​கள் மற்​றும் நீதி​மன்​றங்​களுக்கு வரு​வோரின் தேவையைக் கருத்​தில் கொண்டு மருந்​தகங்​கள் மற்​றும் மருத்​துவ வசதி​களை ஏற்​படுத்த வேண்​டும் என்​றும் அரசிடம் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.