இலங்கையின் ஜெஃப்ரி எப்ஸ்டீனாக உருவெடுக்கும் சுரேஷ் சலே!
Ad Space
Ad Space
முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே தொடர்பில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களை தொடர்ந்து அவரை பற்றிய கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் பெரும் புள்ளிகளின் இரகசியங்களை அறிந்து மர்மமாக இறந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன், இலங்கையின் முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே சில அரசியல் ஆய்வாளர்களால் ஒப்பிடப்பட்டு வருகிறார்.
2019 ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபராக தற்போதைய குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கான தேவாலயங்களைத் தேர்ந்தெடுத்தது மற்றும் தீவிரவாதிகளுடன் இரகசியக் கூட்டங்களை நடத்தியது போன்ற தீவிர குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கடந்தகால ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களின் பல அதிமுக்கிய இரகசியங்களை அறிந்த ஒரு நபராக சுரேஷ் சலே பார்க்கப்படுகிறார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சலே வாய் திறந்தால், இலங்கையின் பல முக்கிய அரசியல் தலைவர்களின் முகமூடிகள் கிழியும் என தெரிவிக்கப்படுகின்றது.
Ad Space
Ad Space