இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து, ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
இதன் முதலாவது பரிசோதனைப் பறப்பு அக்டோபர் இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் (Colombo Port City) நடைபெறவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீன நிறுவனமான EHang தயாரித்த இந்த ட்ரோனில் இரு பயணிகள் பயணிக்க முடியும் என்பதுடன், சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது.
இதன்படி, EHang நிறுவனத்தின் 'Global Fast Track Programme' திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக இலங்கை திகழ்கிறது.
சிகிரியா மற்றும் பிதுரங்கல ஆகிய பகுதிகளுக்கு இடையிலான சுற்றுலாப் பறப்புகள். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து. சுற்றுலா மற்றும் கடல்சார் விநியோகச் சேவைகள் (Maritime Logistics) போன்றவற்றிலும் இதனைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.