இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களையும் மறுசீரமைப்பையும் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட "இலங்கை கிரிக்கெட் சட்டமூலம்" விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் இன்று (06) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த இச்சட்டமூலம் தற்போது சட்டமாக்கப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.