இளவரசர் வில்லியம் நாட்டின் அடுத்த மன்னர் என்றாலும், அவரும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறார் என்பது வியப்பூட்டும் விடயம்தான். இந்நிலையில், அவரது வீட்டுக்கு அவர் எவ்வளவு வாடகை கொடுக்கிறார் என்பதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இளவரசர் வில்லியம் வீட்டு வாடகை

இளவரசர் வில்லியம், ராஜ குடும்பத்துக்கு சொந்தமான க்ரௌன் எஸ்டேட் என்னும் அமைப்புக்குச் சொந்தமான வீடொன்றில் வாடகைக்கு குடியிருக்கிறார். ஃபாரஸ்ட் லாட்ஜ் என அழைக்கப்படும் அந்த வீட்டில் Fait Accompli என்னும் நிறுவனத்தின் தலைவரான அலெக்சாண்டர் (Alexander Fitzgibbons) என்பவர் குடியிருந்துள்ளார்.2025 இறுதியில், அந்த வீட்டுக்கு வில்லியம் கேட் தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் குடிபுகுந்துள்ளார்கள். அலெக்சாண்டர் அந்த வீட்டில் குடியிருந்தபோது, அவர் வீட்டுக்கு வாடகையாக ஆண்டுக்கு 216,000 பவுண்டுகள் செலுத்திவந்தாராம். இளவரசர் வில்லியம் வீட்டு வாடகை 13 கோடி ரூபாயா? | Prince William House Rent Is 13 307 500 Pound தற்போது அங்கு குடிபுகுந்துள்ள வில்லியம் குடும்பத்துக்கு வீட்டு வாடகை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாம். வில்லியம் கேட் தம்பதியர் தங்கள் வீட்டுக்கு கொடுக்கும் வாடகை ஆண்டுக்கு 307,500 பவுண்டுகளாம். 307,500 பவுண்டுகள் என்பது இலங்கை மதிப்பில், 13,67,89,099.50 ரூபாய் ஆகும்!