ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமி நேற்று அமெரிக்காவில் காலமானார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க் நகரில் வசித்து வந்தவருமான தம்பித்துரை முத்துக்குமாரசாமி ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராவார்.
1970 ஆம் ஆண்டில் போராட்ட வரலாற்றை இவரைத் தவிர்த்து எழுதிவிட முடியாது எனுமளவிற்கு முன்னணிப் போராளியாகத் திகழ்ந்தவர். குறிப்பாகத் தமிழ் மாணவர் பேரவை, தமிழ் ஈழவிடுதலை இயக்கம் போன்றவற்றில் ஆரம்பகால உறுப்பினராக விளங்கியவர்.
1985 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயோர்க் சர்வதேச மன்னிப்புச் சபையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமி மறைவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space