உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான விசாரனை ஆரம்பம் வரவேற்கத்தக்கது - எம்.எம்.ரசாட் முகம்மட்
Ad Space
Ad Space
கிண்ணியா நகர சபையின் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (23) நகர சபை மண்டபத்தில் தொழிலாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம்பெற்றது.
இதில் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும் எனவும் விசாரனைகள் இடம் பெறுவதும் வரவேற்கத்தக்கது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரால் பிரேரனை முன்வைக்கப்பட்டு உரையாற்றப்பட்டது.
மேலும் கிண்ணியாவில் சிகரட் பீடி விற்பனைக்கு தடை விதிப்பு தொடர்பிலும் விவாதம் இடம்பெற்றது.
கடந்த 73 வருடங்களாக நாட்டை நாசமாக்கியவர்கள் என அப்பட்டமாக கூறியவர்கள் இப்போது என்ன ஆட்சி செய்கிறார்கள் அதே பாணியில் தான் இவர்கள் செல்கிறார்கள்.
ஏன் எனில் பிரஜா சக்தி என்ற போர்வையில் கிண்ணியா மக்கள் வங்கி வீதி பணி அங்குரார்ப்பண நிகழ்வுக்கு தேசிய மக்கள் சக்தியில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே அழைக்கப்பட்டுள்ளனர் எனினும் குறித்த வட்டார உறுப்பினரோ நகர சபை தவிசாளரோ அழைக்கப்படவிவ்லை என்றும் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.ரசாட் முகம்மட் தெரிவித்தார்.
Ad Space
Ad Space