யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினரும், ஊர்காவற்துறைப் பொலிஸாரும் இணைந்து யாழ். ஊர்காவற் துறையில் திங்கட்கிழமை (02.11.2026) வாகனச் சாரதிகளை இடைமறித்து திடீர்ப் பரிசோதனை நடாத்தியிருந்தனர்.
இதன்போது தனியார் பேருந்துச் சாரதியொருவரும், மோட்டார்ச் சைக்கிள் வாகனச் சாரதியொருவரும் ஆபத்தான போதைப் பொருட்களான ஹெரோயின் மற்றும் கஞ்சா பாவித்து வாகனம் செலுத்தியமை கண்டறியப்பட்டு ஊர்காவற்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைதான சாரதிகளிருவரும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (03.11.2026) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.