ஹெச்-1பி விசா ஸ்பான்சர்ஷிப் வழங்​கு​வது நிறுத்தப்பட உள்​ள​தால் ஊழியர்​கள் அமெரிக்​காவை விட்டு வெளியேற வேண்​டும் என ஐபிஎம் உத்​தர​விட்​டுள்​ளது.

அமெரிக்​கா​வின் முன்​னணி தொழில்​நுட்ப நிறு​வன​மான ஐபிஎம், தனது மிகப்​பெரிய வணி​கப் பிரி​வான ‘ஐபிஎம் கன்​சல்​டிங்’ பிரிவில் பெரும்​பாலான பணி​யிடங்​களுக்கு வழங்​கப்​பட்டு வந்த ஹெச்​-1பி விசா மற்​றும் கிரீன் கார்டு ஸ்பான்​சர்​ஷிப்பை நிறுத்துவ​தாக அறி​வித்​துள்​ளது. அமெரிக்​கா​வில் ஹெச்​-1பி விசா பெற்று பணி​யாற்​று​பவர்​களில் பெரும்​பாலானோர் இந்​தி​யர்​கள் என்​ப​தால் இந்த நடவடிக்கை இந்​திய தொழில்​நுட்ப வல்லுநர்களைக் கடுமை​யாகப் பாதிக்​கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகள​வில் 1,50,000-க்​கும் மேற்​பட்ட ஊழியர்​களைக் கொண்டு இயங்​கும் ஐபிஎம் கன்​சல்​டிங் பிரிவையே இந்த முடிவு முதன்மையாகப் பாதிக்​கிறது. இருப்​பினும், இதனால் அமெரிக்காவில் உள்ள எத்​தனை ஊழியர்​கள் பாதிக்கப்படுவார்கள் என்ற துல்​லிய​மான எண்​ணிக்​கையை ஐபிஎம் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிட​வில்​லை.

இந்த முடி​வால் பாதிக்​கப்​பட்ட வெளி​நாட்டு ஊழியர்​கள், அமெரிக்காவை விட்டு வெளி​யேறி இந்​தியா உட்பட பிற நாடுகளில் உள்ள ஐபிஎம் கிளை​களுக்கு பணி இடமாற்​றம் பெற்றுச் செல்ல வேண்​டும் அல்​லது வரும் டிசம்​பர் 31-ம் தேதிக்குள் பணியை விட்டு விலக வேண்​டும் என உத்தரவிடப்பட்டுள்​ளது.

தங்​களது முடிவை அறிவிக்க ஊழியர்​களுக்கு மூன்று வாரங்​கள் வரை அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. பதவி விலகும் ஊழியர்களுக்கு 3 மாத ஊதி​யம் வழங்​கப்​படும் என அறிவிக்கப்பட்​டுள்​ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்​தின் கடுமை​யான விசா கட்​டுப்​பாடு​கள் மற்​றும் சந்தை மாற்​றங்​களுக்கு ஏற்​பவே இந்த முடிவை எடுத்​துள்​ள​தாக ஐபிஎம் தரப்​பில்​ விளக்​கமளிக்​கப்​பட்​டுள்​ளது.