தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்த பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்த பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும்.
நான் முன்பே கூறியிருந்ததை போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.
மேலும், மாவட்டவாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட் டுள்ளன. இது முறையான செயல் அல்ல. அந்த இயக்கங்களுக்கும், நமது இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஏற்கெனவே, அண்ணாமலை அன்புக்கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம்.