ப்ளூமெண்டல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் இன்று சனிக்கிழமை (21) காலை டீசல் கசிவு ஏற்பட்டுள்ளது.
கசிந்து வெளியேறிய டீசல், குறித்த வளாகத்தின் வடிகால் அமைப்பு ஊடாக வெளியேறியதையடுத்து, அப்பகுதி மக்கள் காலை முதலே வாளிகள் மற்றும் கேன்களைக் கொண்டு டீசலைச் சேகரித்து வருவதைக் காண முடிந்தது.