உலக புகழ்பெற்ற செல்வந்தரான எலான் மஸ்க்கிற்கு “நெஷனல் மெடல் ஒப் சைன்ஸ்” (National medal of science)  என்ற பதக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கி கௌரவித்துள்ளார். 

அத்துடன் விருது வழங்கும் விழா மேடையில் பேசிய ட்ரம்ப், எலான் மஸ்க்கை, அவர் ஒரு “நவீனகால தோமஸ் அல்வா எடிசன்”, “டைட்டன்”, “ஜீனியஸ்”, “தேசிய பொக்கிஷம்” எனப் பலவிதமாக விழித்துப் பாராட்டியிருந்தார். 

மேலும், எலாம் மஸ்க்கைப் பார்த்து, “அவரைப் போல வேறு யாரும் இல்லை” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். 

வொஷிங்டனில் உள்ள தேசிய கல்வி நிறுவனமான “Donald J. Trump Institute of Peace” என்ற நிறுவனத்தில் நேற்று (8) நடைபெற்ற 'A New Golden Age submmit' நிகழ்வில் டொனால்ட் ட்ரம்ப் இந்த பதக்கத்தை எலான் மஸ்க்கிற்கு வழங்கிவைத்தார். 

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க், எக்ஸ் முதலான நிறுவனங்களுக்கு உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு விருது வழங்கிய ட்ரம்ப், மஸ்க் விண்வெளி தொழில்நுட்பம், செயற்கைக் கோள் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பிற துறைகளில் அதிக பங்களிப்பு வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.