எழுத்தாளர் பூமணி மறைவு: கனிமொழி இரங்கல்..
Ad Space
Ad Space
திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நவீனத் தமிழிலக்கிய ஆளுமை கரிசல் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவருமான எழுத்தாளர் பூமணி மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. .
இரங்கல்கரிசல் நிலப்பகுதி மக்களின் வாழ்வியலை, மொழி, பண்பாட்டை மையமாகக் கொண்ட கலைப்படைப்புகள் அவருடையவை. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக படைப்பிலக்கிய வெளியில் பயணித்து வரும் அவர், தமிழின் யதார்த்தவாத புனைவெழுத்தின் முன்னோடியாக புது தலைமுறை எழுத்தாளர்களிடமும் தாக்கம் செலுத்தியவர்.
அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space