யாழ்.ஏழாலையில் விபத்துக்குள்ளான முதியவர் 17 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குப்பிழான் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி கமலநாதன் (வயது-67) என்ற இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையாரே உயிரிழந்துள்ளார்.
இம் மாதம்-13 ஆம் திகதி யாழ்.குப்பிழானில் அமைந்துள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஏழாலையிலுள்ள தனது வீடு நோக்கிச் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது அன்றைய தினம் மாலை ஏழாலை சிவகுரு கடைக்கு அருகில் மோட்டார்ச் சைக்கிள் மோதிக் குறித்த முதியவர் காயமடைந்து கோமா நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (29.10.2026) உயிரிழந்துள்ளார்.