‘ஒரு வாக்குதானே’ என எண்ணாமல், ‘ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது’ என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இரவு 8.50 மணி நிலவரப்படி சுமார் 85.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தேசம் சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெறும் தமிழத்தில் முதல் முறையாக 85 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த சூழலில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின், எக்ஸ் சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
“ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது” - சாதனை வாக்குப்பதிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து
Ad Space
Ad Space
Ad Space
Ad Space