கண்டி மாநகர சபையினால் அனுமதியளிக்கப்படாத   கட்டடமே இடிந்து விழுந்தது  என கண்டி  மேயர் சந்திரசிரி விஜேநாயக்க தெரிவித்தார்.

கண்டி கொடுகொடல்ல வீதிக்கு அருகில் அமைந்துள்ள ஆறு மாடிகளைக் கொண்ட  கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த காலங்களில்  பரிசோதிக்கப்பட்டு,  கட்டுமானப் பணிகளை  உடன் நிறுத்துவதற்கும்  உத்தரவிடப்பட்டதாகவும்  கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை மிகவும் சூட்சுமமான முறையில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டவிரோத கட்டிடம் எவ்வித தர நிர்ணயமும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு கட்டுமான ஒப்பந்ததாரர் மற்றும் பொறுப்பான பொறியியலாளர் ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மேயர் மேலும் தெரிவித்தார்.