கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் வீதியில் மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவினால் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தற்போதும் மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.