கந்தேகெதரவில் தொல்பொருட்களை தேடும் முயற்சியில் ஈடுபட்ட மூவர் கைது!
Ad Space
Ad Space
கந்தேகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஜர்வத்த பகுதியில், சட்டவிரோதமான முறையில் தொல்பொருட்களை தேடும் முயற்சியில் நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (06) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தேகெதர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 29 மற்றும் 40 வயதுகளையுடைய வட்டகொட, ஹாலிஎல மற்றும் தெல்கொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் குறித்து கந்தேகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Ad Space
Ad Space