பாணந்துறை பகுதியில் உள்ள வீட்டில், கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளம் யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வந்த நிலையில், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த போதே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்று அருகில் கிடந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றப்பிரிவு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கமைய, சடலம் மீதான பிரேதப் பரிசோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.