கனடாவில் கொலை முயற்சி குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த தமிழ் இளைஞன் காவல் துறையில்  சரண் அடைந்துள்ளதாக  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்வதற்காக காவல் துறையினரால்  தேடப்பட்டு வந்த நிலையில், 35 வயதான விமல் மோகன் தானாகவே முன்வந்து சரணடைந்துள்ளார்.

பிராம்ப்டனில் கடந்த வாரம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கில் சந்தேக நபர் தேடப்பட்டு வந்தார். 

கடந்த 7ஆம் திகதி கத்திக் குத்துக்கு இலக்கான நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் விமல் மோகனுக்கு தொடர்பு இருப்பதாக  காவல் துறையினர்கண்டுபிடித்தனர்.

இதன்படி, சந்தேக நபருக்கு எதிராக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்றையதினம் விமல் மோகன் உள்ளூர்  காவல் துறை  நிலையத்திற்கு சென்று தானாகவே சரணடைந்துள்ளதாக பீல் பிராந்திய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.