தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உட்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக் கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச் சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ம் தேதி திருத்தம் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக் கற்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
கனிமங்களை வெளி மாநிலம் கொண்டு செல்ல தடை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space