Beaches & Islands
கனடாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசனுக்கும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதனுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ்பேசும் சமூகங்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் குறித்து மனோகணேசன் எடுத்துரைத்ததாக ஜுவனிதா நாதன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பயங்கரவாதத்டைச்சட்டத்தை நீக்குதல், படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலைக் குறைத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், மலையகத் தமிழர்களுக்கான நில ஒதுக்கீட்டை உறுதிசெய்தல், மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றின் அவசியம் தொடர்பில் இதன்போது வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில், இந்த விவகாரங்கள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன என்பது பற்றியும் மனோகணேசன் விளக்கமளித்ததாக ஜுவனிதா நாதன் சுட்டிக்காட்டியுள்ளார். கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதாவிடம் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்த மனோகணேசன்
Ad Space
Ad Space
இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ்பேசும் சமூகங்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் குறித்து கனேடிய ஆளும் லிபரல் கட்சி பாராளுமனற் உறுப்பினர் ஜுவனிதா நாதனுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் விளக்கமளித்துள்ளார்.
Ad Space
Ad Space