கரும்புலிகள் நாள்!
Ad Space
Ad Space
தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட கரும்புலிகள் நாளான யூலை 5-ம் திகதியும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும் முதலாவது கரும்புலியுமான கப்டன் மில்லரின் நினைவு தினமும் இன்றாகும்.
வல்லிபுரம் வசந்தன் என அழைக்கப்படும் கரும்புலி கப்டன் மில்லர் யாழ்.வடமராட்சி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான தாக்குதலில் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி வீர மரணமடைந்தார்.
சிறிலங்கா இராணுவத்தினரின் ஒப்ரே சன், லிபிரேசன் என்னும் இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணம் வடமராட்சி, நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்திருந்தனர்.
இந்நிலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சுமையுந்து (பார ஊர்தி) ஒன்றை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை நோக்கி நகர்த்திய கரும்புலி கப்டன் மில்லர் அதனை வெடிக்க வைத்து உயிரிழந்துள்ளார். இதன் போது 40 இராணுவ வீரர்கள் அவ்விடத்தில் மரணமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிலைக்கொண்டிருந்த சிறிலங்கா முப்படைத் தளங்கள் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர் பல்வேறு தாக்குதல்களை தொடுத்ததில் 300ற்கு மேற்பட்ட கரும்புலி மாவீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.
Ad Space
Ad Space