களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்
Ad Space
Ad Space
களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது இளைஞனா மீனவர் ஒருவர் சனிக்கிழமை (23) இரவு சென்றவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள அவர் ஞாயிற்றுக்கிழமை (24) காலை ஆகியும் வீடு திரும்பவில்லை
இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில் மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் இல்லாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space