காங்கேசன்துறையில் தங்கம் கடத்தல் சந்தேகம்: 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை
Ad Space
Ad Space
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் காங்கேசன்துறையில் இருந்து இன்று புதன் கிழமை நாகைபட்டினம் பயணிக்கவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காலை நாகைபட்டினத்தில் இருந்து.
117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர். இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து 146 பயணிகள் நாகைபட்டினம் பயணிக்க காங்கேசன்துறை துறைமுகத்தில் காத்திருந்தனர்.
இவ்வாறு காத்திருந்த 146 பயணிகளில் 26 பேரை தங்கம் கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் பேரில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 26 பேரையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.
Ad Space
Ad Space