விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி அமைப்பு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையுடன் இணைந்து நடாத்தும் மூன்றாம் கட்ட மரநடுகைச் செயற்திட்ட நிகழ்வு தீபாவளித் திருநாளான நாளை ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) மாலை-03 மணியளவில் யாழ். காங்கேசன்துறைக் கடற்கரைப் பகுதி மற்றும் சிறுவர் பூங்கா பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
மரம் வளர்ப்போம் எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த மரநடுகைச் செயற்திட்ட நிகழ்வு எதிர்வரும் காலங்களில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.