காணாமல் போன 19 வயது இளம்பெண்: தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு அட்டம்பிட்டிய காவல் துறை கோரிக்கை
Ad Space
Ad Space
அட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலிஎல பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய காவிந்த்யா பவனி என்ற இளம்பெண் காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரால் கடந்த 2026.03.06 அன்று அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அட்டம்பிட்டிய பொலிஸார் வெலிமடை நீதவான் நீதிமன்றத்திற்கு விபரங்களை சமர்ப்பித்துள்ளதுடன், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகளுக்காக தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
காணாமல் போயுள்ள இந்த இளம்பெண் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமும், சாதாரண உடல் அமைப்பும், மாநிறமும் கொண்டவர் என்பதுடன், இடுப்பு வரை நீண்ட தலைமுடியைக் கொண்டவர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளார். எனவே, இவரைப் பற்றிய ஏதேனும் விபரங்கள் அல்லது தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் 071 8591528 என்ற இலக்கத்திற்கோ அல்லது 055 2294965 என்ற பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்புகொண்டு அறியவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Ad Space
Ad Space