மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மாமனார் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
குறித்த சிறுவனின் தந்தையார் தாயார் பிரிந்து வாழ்ந்து வருவதுடன் தந்தையார் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் தந்தையாரின் உறவினரான மாமா வீட்டிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் உட்பட அவரது சகோதரர்கள் சென்று தந்தையாருடன் தொலைபேசியில் பேசி வருவதுடன் அவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா பணத்தை மாமனார் ஊடாக தந்தையார் அனுப்பி அதனை வழங்கி வருகின்றார்.
இதன் காரணமாக குறித்த சிறுவன் கடந்த மாதம் 24 ம் திகதி மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மாமனார் சிறுவனின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் சேட்டை செய்ய முயற்சித்துள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த 27 திகதி மாமானார் வீட்டுக்கு சென்ற சிறுவனிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த சிறுவன் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து கடந்த டிசம்பர் 30 ம் திகதி 1990 என்ன அவசர சேவைக்கு முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து பொலிஸார் குறித்த சிறுவனிடம் முறைப்பாட்டை பதிவு செய்து அவரை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர்
இந்த நிலையில் குறித்த மாமனார் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் ஒரு அரசியல்வாதி எனவும் அவரை கைது செய்ய தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த மாமனார் தலைமறைவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space