கால்வாய்க்குள் விழுந்த நிலையில் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கம்பிட்டிய பகுதியில், வீதியோரக் கால்வாய் ஒன்றினுள் விழுந்த நிலையில் நபர் ஒருவர் மீட்கப்பட்டு பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அங்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் வாகன விபத்து என சந்தேகிக்கப்பட்ட போதிலும், பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் இது விபத்தினால் ஏற்பட்ட மரணம் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space