‘காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை. அதனால் எந்தப் பயனும் ஏற்படாது’ என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
அதுவரை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. பட்ஜெட்டில் பழைய திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. தமிழகத்தில் பெரும்பாலான திட்டங்கள் கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருபவைதான்.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space