வவுனியா- சமளங்குளம் பகுதியில் வசித்து வரும் வயோதிப பெண்மணியை காணவில்லை என அவரது மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
தெய்வானை என்ற பெயருடைய வயோதிபப் பெண்ணே காணாமல் போயுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை(19) மாலை வீட்டிலிருந்து கிளிநொச்சி செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்திற்கு தனது மகனுடன் சென்றுள்ளார்.அதன் பின்னர் அவரது தொடர்பு இல்லை எனக் கூறப்படுகின்றது.
எனவே படத்தில் உள்ள முதிய பெண்மணியை யாராவது கண்டால் 0776305405 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவலை தெரிவிக்குமாறு அவரது குடும்பத்தினர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.