மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். இது எமது கொள்கைப் பிரகடனத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கொள்கைப் பிரகடனம் 5 வருடங்களுக்குரியது. அதனை கட்டம் கட்டமாக செய்வோம். ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தவிர வேறு எவராவது வந்திருந்தால் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும். முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் மக்களுக்கான வரவு செலவுத் திட்டமே ஆகும். கீழ் மட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என   பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன   தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (17) செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நான்காம்  நாள்  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராகவுள்ளோம். ஆனால் இவ்வாறு ஏற்றுக்கொள்வதை அரசாங்கத்தின் பலவீனம் என்று நினைக்கக்கூடாது. கட்டம் கட்டமாக கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம் என்பதனை கூறிக்கொள்கின்றோம். அத்துடன் மாற்றத்திற்காக காலத்திற்கு போகும் போது ஸ்தீரத்தன்மையுடனேயே மாற்றத்திற்கு போக வேண்டும்.

ஆனால் எதிர்க்கட்சியின் இன்றைய நிலைமையோ அவர்கள் ஸ்தீரமான நிலையிலும் இல்லை மாற்றத்தை காணவும் இல்லை. வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்து எதிர்க்கட்சிக்கு ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ள முடியும். முதலில் தேசிய மக்கள் சக்தி எந்தளவுக்கு மாற்றத்திற்கான அடையாளங்களை காட்டியுள்ளனர் என்பதனை பார்க்கலாம்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கூறும் கருத்துக்களை பார்க்கும் போது எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள்  இன்னும் பழைய நிலையில்  தான்  இருக்கின்றனர் என்பதே தென்படுகின்றது. முதலில் எதிர்க்கட்சியினர்  வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்து மாற்றத்தை நோக்கி பயணியுங்கள் என்று கேட்கின்றோம். இந்த நாடு மாறிவிட்டது. ஆனால் இன்னும் எதிர்க்கட்சி மாற்றமடையவில்லை. பழைய முறையில் நடந்துகொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது என்பதனை எதிர்க்கட்சிக்கு கூறிக்கொள்கின்றோம்.

இதேவேளை எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைவாகவே உள்ளது. அபிவிருத்தியடைந்து வருவதாக கூறப்படும் நாடுகளை விடவும் குறைந்த விலைகளிலேயே இங்கு உள்ளன. இந்த விடயத்தில் மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படவில்லை. மக்களுக்கு நிவாரணங்களையே வழங்கியுள்ளோம். மக்கள் இவற்றை புரிந்துகொள்ள வேண்டும். எரிபொருளுக்காக 100 பில்லியன் ரூபா ஒதுக்கி அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. சகல துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே அரசாங்கம் செயற்படுகின்றது.

இன்னும் வரிச் சலுகைகளை வழங்கி உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். இது எமது கொள்கைப் பிரகடனத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கொள்கைப் பிரகடனம் 5 வருடங்களுக்குரியது. அதனை கட்டம் கட்டமாக செய்வோம். ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தவிர வேறு எவராவது வந்திருந்தால் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும். முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் மக்களுக்கான வரவு செலவுத் திட்டமே ஆகும். கீழ் மட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.