முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (09) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான சுகீஸ்வர பண்டார தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
குறித்த விசாரணைகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விசாரணைகளின் மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.