இலங்கை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 170 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இன்று வெள்ளிக்கிழமை (02) அழிக்கப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அசோக்க தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் கையிருப்பு இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் பெறப்பட்டு, பின்னர் புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் நிறுவப்பட்ட எரியூட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படவுள்ளது.