தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான இலகுநாதன் செந்தூரனின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) மாலை யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சுடரேற்றி செந்தூரனின் உருவப்படத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.