நுவரெலியா பொலிஸ் பிரிவின் மாகஸ்தோட்ட பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நுவரெலியா பொலிஸ் குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் நேற்று (12) வியாழக்கிழமை இரவு நுவரெலியா பிரதான பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தேரிப்பஹா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணையில், அவர் கடந்த 10 ஆம் திகதி தேரிப்பஹா பொலிஸ் பிரிவில் காவலில் இருந்து தப்பிச் சென்ற தேடப்படும் நபர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து சந்தேக நபர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.